நாட்டின் தேசிய இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்யாவிட்டால் முப்பதாண்டுகளாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.
அநுராதபுரம், தம்புளு ஹல்மில்லேவ இராணுவ முகாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யுத்த நினைவுதூபியை திறந்து வைக்கும் நிழ்வில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இராணுவம, காவற்துறை, சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஆயிரக்கானவர்கள் தாய்நாட்டிற்காக தமது பெறுமதியான உயிரை தியாகம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
தாய் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் மனித வாழ்வின் பாதுகாப்பிற்குமாக உயிரை தியாகம் செய்து பெற்றுத் தரப்பட்ட சுதந்திரத்தை தற்போது அவர்களால் அனுபவிக்க முடியாதுள்ளதாகவும், எனினும் அவர்கள் அர்ப்பணிப்பு செய்யாவிட்டால் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.