இந்தியாவில் மருத்துவ கல்விக்குரிய நுழைவுத்தேர்வான நீட் வருடத்திற்கு 2 தடவை இணைய மூலம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு வருடம் ஒன்றிற்கு இரண்டு முறை நடத்தப்படும் எனவும், நீட் தேர்வு இணைய முறையில் நடத்தப்படும் எனவும் அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கும் திகதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில், நீட் தேர்வு அடுத்தாண்டு மே மாதம் 5-ம் திகதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு இணைய முறையில் இல்லாமல் பேப்பர், பேனா அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.