முல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் இன்று (21.08.16) கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சை எழுதிவரும் 19 வயது மாணவி, பரீட்சை முடிவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, நேற்று (20.08.18), பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன், ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று, பளைப்பகுதியில் வைத்து, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின் இன்று உடையார் கட்டுப்பகுதியில் கொண்டு சென்று இறக்கிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணையை மேற்கொண்ட னர். இதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பளைப்பகுதிக்கு சென்று மாணவி கடத்தலுக்கு உதவிய நபர் ஒருவரை இன்று பிற்பகல் கைதுசெய்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து இன்று இரவு பளைப்பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு காவற்துறையினர், மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பளை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளார்கள். இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.