இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறிய குற்றத்துக்காக இங்கிலாந்து வீரர் ஸ்ருவாட் புரோட் ( Stuart Broad ) க்கு போட்டியின் சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நொட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்டமைக்காக அவருக்கு இவ்வாறு ஐசிசியினால் அபராதம் வதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாள் போட்டியின் போது புரோட் வீசிய பந்தில் இந்திவீரர் ரிஷப் பந்த் ஆட்டம் இழந்தபோது அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டமைக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.