வெனிசுலா மற்றும் வனுவாட்டு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற் வீதிகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
அதேவேளை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான வனுவாட்டு தீவிலும் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 15 முதல் 30 நொடிகள் உணரப்பட்டதாகவும் எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தநிலநடுக்கங்கள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.