குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றுமுன்தினம் (20.08.18) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவற்துறையினர் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட்ட போது போது அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன. இதன் போது சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவற்துறையினர் சிலரை கைது செய்திருந்தனர் அதன் பின்னரே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.