வட கொரியா – தென் கொரியா எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. வட கொரியா – தென் கொரியா இடையே நீண்டகாலமாக நிலவி வந்த கசப்புணர்வு தற்போது படிப்படியாக குறைந்து வருவதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன.
இரு நாட்டு ஜனாதிபதிகளும் கடந்த ஏப்ரலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அமைதி நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வட கொரியா – தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் அமைந்தி ருக்கும் ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதன்படி, இந்த ராணுவ நிலைகள் பரஸ்பரம் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சாங் – யூங் – மூ நேற்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்
இதேவேளை இருநாடுகளின் சிரேஸ்ட ராணுவ தளபதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த மாதம் இருநாடுகளுக்கு இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத் தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது