தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவிகளை ஏற்க வேண்டும் என இந்திய மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அமீரக அரசு 700 கோடி ரூபா தருவதாக தெரிவித்துள்ள நிலையில் பேரிடர் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என்ற மத்திய அரசின் கொள்கை காரணமாக அந்த நிதியுதவியை ஏற்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஓகஸ்ட் 26-ம் திகதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம் எனினும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. முடிவெடுக்கும் போது பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.