பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு அண்மையில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில்இஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிசில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டிராப்பர்ஸ் என்ற நகரில் இன்று இந்தக் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.இனந்தெரியாத நபர், பொதுமக்ககள் மீது கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்துவிட்டதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேவேளை கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றுள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு பாரிஸ் மெட்ரோ புகையிரத நிலையங்களில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமைடைந்திருந்த நிலையில் அவற்றில் சில சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது