318
மேற்கு வங்காளத்தின் மார்கரம்பூர் கிராமத்தில் மம்தாபாணர்ஜியின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு தொண்டர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இன்று காலை நடைபெறும் கூட்டத்திற்காக அலுவலக கதவை திறக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
காயமடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love