ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உட் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏமனில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் ஹவுத்தி போராளிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுக்கு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், ஹோடேய்டா நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினருக்குமிடையில் கடும் யுத்தம் நடைபெற்று வருகின்ற நிலையில் அப்பகுதியில் இருந்து தப்பி வேறு இடங்களுக்கு தப்பியோட முயன்றவர்கள் மீதே இவ்வாறு வான்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது