சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று கூடுதல் வரி விதித்து உள்ளது. சீனாவால் ஏற்படும் வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்கா நேற்று கூடுதல் வரி விதித்து உள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 50 பில்லியன் டாலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்த நிலையில் அதன்படி ஏற்கனவே 34 பில்லியன் டொலர் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்தது. மீதி 16 பில்லியன் டொலர் பொருட்களுக்கு தற்போது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.