217
சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் ஹவாய் தீவை லேன் எனப் பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியதனையடுத்து கனமழை பெய்து வருவதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசவதனால் அலோஹா என்ற பகுதியில் வீட்டு கூரைகள் காற்றில் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அங்கு வெள்ளமும் ஏற்பட்டுள்ளதனால், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளமையால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஹவாய் தீவில் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Spread the love