உச்சநீதிமன்றில் நடைபெற்றுவரும் தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்சநீதிமன்றில் நடைபெறும் தேசிய நலன் சார்ந்த வழ க்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பவோ அல்லது வீடியோ பதிவு செய்யவோ அனுமதிக்க கேட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஸ்வப்னில் திரிபாதி மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணியான இந்திரா ஜெய்சிங் ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரித்து வருகின்ற நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வில் நடக்கும் அரசியல்சாசன வழக்குகளின் விசாரணையை சோதனை அடிப்படையில் நேரலையில் ஒளிபரப்பலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இது குறித்து சட்டமாஅதிபரின் கருத்தினை கேட்டபின் இது குறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்த நீதிபதிகள் தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாக நேற்றையதினம் அறிவித்துள்ளனர்.