காஷ்மீர் விவகாரம் உள்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் வெளியுறவு கொள்கைகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சருடன் நேற்றையதினம் ஆலோசனையில் மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே வெளியுறவுத் துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.,
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளது என்பதில் ரகசியம் ஏதும் இல்லை எனவும் இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்று பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு காண்பது உள்பட இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்தாலும் மீண்டும் பேசுவார்த்தையை ஆரம்பிக்க பாகிஸ்தான் அரசு வெட்கப்படவில்லை எனவும் முதலில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.