ஈரானின் கெர்மானஷனா நகரில் இன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக கெர்மன்ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டதனையடுத்து 3வ தடவையாக ஏற்பட்ட இந்த நடுக்கம் கெர்மான் ஷாவின் வடகிழக்கில் 88 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கெர்மான்ஷா மாகாணத்தில் கடந்த வருடம் நவம்பரில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 530 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது