குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வரலாற்று சிறப்பு மிக்க செல்வசந்நிதி ஆலய தேர்த்திருவிழாவின் போது 15 பவுண் நகை களவாடப்பட்டு உள்ளது. செல்வசந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதன் போது ஏற்பட்ட சன நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். ஆலயத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த வல்வெட்டித்துறை காவற்துறையினர் காவலரனில், நேற்றைய தினம் சன நெரிசலை பயன்படுத்தி தமது கழுத்தில் இருந்த தங்கபாரணங்களை திருடர்கள் அறுத்துள்ளனர் என ஆறு பேர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் களவாடப்பட்ட நகைகள் 15 பவுண் எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம் என காவற்துறையினர் தெரிவித்தனர்.