இணையம் மூலமான முறைப்பாடுகளின் மீது வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையகத்திடம் இந்திய உள்துறை அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது. காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 154-ல் விளக்கமளிக்கப்பட்டதன்படி பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கு ஏற்ற குற்றங்களை செய்தவர் பற்றிய தகவல் பெற்றால், கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இணையம் மூலமான முறைப்பாடுகளின் மீது வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையகத்திடம் உள்துறை அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.
இதனிடையே இணையம் வழியாக பெறப்படுகிற முறைப்பாடுகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்ட திருத்தம் செய்தால், இந்த வசதியை தவறாக பயன்படுத்தி மற்றவர்களை களங்கப்படுத்துகிற நிலை உருவாகும் என பல தரப்பினரும் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.