முக்கிய வர்த்தக விடயங்களில் அமெரிக்காவும் மெக்சிகோவும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன. வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிப்பதற்கு அழுத்தம் வழங்கும்வகையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வர்த்தக ரீதியான இந்த முன்னேற்றம் குறித்து நேற்று திங்கட்;கிழமை அறிவித்துள்ளார்.
கனடா இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ள நிலையில் இறுதியாக இந்த ஒப்பந்தம் கனடாவின் சம்மதம் மற்றும் கையெழுத்துடன் முழுமை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தம் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில் இறுதி பயன்கள் மற்றும் விளைவுகள் குறித்து தெளிவில்லாத நிலைமையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது