Home இந்தியாஎய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :

எய்ம்ஸ் மருத்துவ மனை குறித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :

by admin


விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சட்டதரணி ஒருவர் தமிழ்நாட்டில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

விழுப்புரம் மாவட்டமானது தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் அதிக விகிதாசாரத்தில் மக்கள் வசிக்கும் பெரிய மாவட்டம் எனவும் அங்கு விபத்துகளும் மிகவும் அதிக அளவில் நடைபெறுகின்ற நிலையில் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரிக்க தவறி உள்ளதென தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் குறித்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்து நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More