தென்னாபிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் இங்கிலாந்து கழக அணியான லங்காஷைரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேஷவ் மகாராஜ் அண்மையில் இலங்கைக்கு எதிரான ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்த நிலையில் லங்காஷைர் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
லங்காஷைர் தற்போது பிரிவு ஒன்றின் 14 போட்டிகளில் 10-ல் விளையாடி கடைசி இடத்தில் உள்ள நிலையில் ஏனைய கழக அணிகளுக்கு எதிரா போட்டிகளின் போது மகாராஜ் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஜ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது