வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக செயற்படும் டொன் மெக்கான் எதிர்வரும் வரும் மாதங்களில் தனது பதவியில் இருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரும் இலையுதிர் காலத்தில், அவர் இப்பதவியில் விலகுவார் எனத் தெரிவித்துள்ள டிரம்ப் நான் அவருடன் நீண்ட நாள்கள் பணிபுரிந்து வந்துள்ளேன். அவரது பணி செய்யும் திறமை மிகவும் பாராட்டுக்கு உரியது என ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2016 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் மெக்கானின் ஒத்துழைப்பு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையை தொர்ந்து இந்த வெளியேற்றம் நிகழவுள்ளளமை குறிப்பிடத்தக்கது