134
இலங்கையில் விஷேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் வௌியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஷேட வைத்திய நிபுணர்கள் கட்டாயமாக 63 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீராக்கம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 06ம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரையில் விஷேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக இருந்துள்ளது.
Spread the love