144
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரான அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 09.30 மணியளவில் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
Spread the love