134
கொழும்பு மாளிகாவத்தையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை ஜும்ஆப் பள்ளி சந்தியில், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மாளிகாவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love