குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று (29.08.2018) இரவு சடலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட நிலையில் சற்று முன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது அவ் அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த அறிக்கையில் இறப்புக்கான காரணம் கயிறு ஒன்றினால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்தப் பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும்,கொலைசெய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்ப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடது புற கண்ணுக்கு மேல் தலைப்பகுதியில் குத்தப்பட்ட உட் காயம் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் கிளிநொச்சி – முல்லைத்தீவிக்கான பிரதிப் காவற்துறை மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்
அதன் அடிப்படையில் கொல்லப்பட்ட பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் காவற்துறையினரால் சந்தேக நபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள் மற்றும்காவற்துறையினருக்குத் தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்புக் கமராக்களின் பிரதியினைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியினை இன்று(30.08.2018). கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தகது