163
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அம்பாறையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோவில் பகுதியிலேயே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசங்களை எழுப்பினர். தமது உறவுகளை பறி கொடுத்த நிலையில் பெரும் துன்பத்தின் மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
Spread the love