மத்திய மியன்மாரில் உள்ள ஸ்வார் கிரீக் என்ற பகுதியில் உள்ள அணை ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 85 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சுமார் 65 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். நேற்றையதினம் ஏற்பட்ட இந்த அணை உடைவு காரணமாக வயல்கள், வீடுகள், வீதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்ட இந்த அணை பாராமரிப்பின்றிக் காணப்பட்டுள்ள நிலையில் அதிகளவான நீரை சேமித்து வைத்திருந்தனால் உடைவு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ராணுவமும், மீட்பு குழுவினரும் மீட்டு மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.