169
கிழக்கு எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ராணுவத்தினர் உட்பட 18 உயிரிழந்துள்ளனர். டைர் டிவா என்ற நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி புறப்பட்ட ஹெலிகொப்டர் ஒரோமியா என்ற பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது.
15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்துள்ள நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருவின்றது.
Spread the love