உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவை நடத்தும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதிலிருந்து விலகப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும், நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது.உள்ளூர் தொழில் அமைப்புகளை வெளிநாட்டு சந்தையிடமிருந்து பாதுகாக்க பல வரிகளை விதித்து வரும் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்கா நியாமாக நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தான் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பிலிருந்தே உலக வர்த்தக நிறுவனம் நியாயமற்றதாக நடந்து கொள்வதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.டிரம்பின் இந்த எச்சரிககையானது அவரின் வர்த்தக கொள்கைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் வெளிப்படையான வர்த்தக முறைக்கும் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.