Home இலங்கை கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி புகையிரதம் மீது கல்வீச்சு – ஒருவர் காயம்

கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி புகையிரதம் மீது கல்வீச்சு – ஒருவர் காயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கடுகதி புகையிரதம் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடியை சேர்ந்த பா.சிவச்செல்வம் (வயது 64) என்பவரே கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

குருணாகலில் இருந்து யாழ்.நோக்கி வருவதற்காக புகையிரதத்தில் குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மதவாச்சிக்கு அண்மித்த பகுதியில் புகையிரதம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்த நபர் தற்போது அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More