ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு உதவிய குற்றத்துக்காக அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவருக்கு 25 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்க விமான படையின் வான்வழி போக்கு வரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்த 35 வயதான இகாய்கா எரிக் காங் (Ikaika Erik Kang) என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த போது அங்கு பணிபுரிந்த வேளையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவியதாகவும் பல்வேறு தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இவர் மீது ஹவாய் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இவரைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் 25 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது