பயங்கரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த தவறவிட்டதாக தெரிவித்து பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 300 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பாடசாலையில் பாகிஸ்தான் வீரர்கள் சேருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.