170
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மின்னல் தாக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Spread the love