வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் என்கிறார் மீள்குடியேற்ற அமைச்சர்!
வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சிலர் வெளியிடுவதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இதுவரையில், 6009.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதான நகரங்களில் உள்ள படையினர்களின் முகாங்களை மாற்ற 866.71மில்லியன்ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களில் மீள்குடியேற்றத்தின்போது, வீடமைப்பு, சேதமடைந்த வீடுகளின் புனரமைப்பு, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் தமது அமைச்சுமீது சிலர் காழ்ப்புணர்வு கொண்டு இவைகளை மறைத்து உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.