வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டத் தொடங்கியுள்ளனர்.
“அடிப்படை சம்பளத்தினை 27,500 ரூபாவாக உயர்த்து”
“மேலதிக சம்பளமான 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் சேர்”
“03/2006 சுற்றுநிறுபத்தின் படி சம்பளத்தை அதிகரி”
“கல்வித்தகமைக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வை வழங்கு”
“ஒப்பந்த அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர பதவியை வழங்கு”
”சாரதி மற்றும் காப்பாளரின் கைவிரல் அடையாள பதிவினை இரத்துச்செய்”
“உயர்ந்த போக்குவரத்து தண்டத்தை இரத்துச்செய்”
“சீரான போக்குவரத்துr; சேவையை செயற்படுத்துவதற்கு> புதிய பேருந்துககளையும், சாரதி காப்பாளர்களையும் தந்துதவு ”
என்ற எட்டு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருப்பதையும், தனியார் பேருந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.