பாகிஸ்தானில் நேற்றையதினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப் ரஹ்மான் ஆல்வி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 9-ம் திகதியுடன் நிறைவடைவதால் அந்த பதவிக்கு நேற்றையதினம் தேர்தல் நடைபெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஆரிப் ஆரிப் ரஹ்மான் போட்டியிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக ஆசிப் ஆரிப் ரஹ்மான் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது