கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலால் நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்திருந்தனர்
தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகின்ற நிலையில் வெள்ளப்பாதிப்பினால் ஏற்பட்டு;ள்ள தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் எலிக்காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்திருந்தநிலையில் நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை எனனவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.