155
தமிழ்மக்களை தூண்டுவதை மாத்திரமே விக்னேஸ்வரனால் செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் குறிப்பிடத்தக்க பாரிய அபிவிருத்தி திட்டமொன்றையும் முன்னெடுக்கவில்லை அவரால் அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட மாத்திரமே முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தியாகங்கள் காரணமாகவே விக்னேஸ்வரனால் பதவி வகிக்க முடிகின்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க, குறிப்பாக ஐந்து வருடங்களாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிவகிக்கின்ற போதிலும் அவர் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
1 comment
தமிழர்கள் சார்பான பாரிய அபிவிருத்தி திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்த அரசாங்கம் தடையாக உள்ளது. பாதுகாப்பு படையினர் செய்த கொடூர குற்றங்களினால் தமிழ் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது போன்று தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றை உலகறிய செய்து வருகின்றார் விக்னேஸ்வரன்.