குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீர் அல்ல எனவும், ஒரு வித நிறத்துடன் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குழாய் வழி ஊடாக தங்களுது வீடுகளுக்கு விநியோகிக்கப்புடுகின்ற நீரை போத்தல்களில் பெற்று அதனை கிணற்றில் இருந்து பெறப்படுகின்ற நீருடன் ஓப்பிடும போது வேறுபாடு அப்பட்டமாக தெரிகிறது. இது குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல எனவும் பொது மக்கள் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகருக்கும் நகரை அண்டிய பகுதிகளுக்குமான குடி நீர் விநியோகமானது இரணைமடு குளத்திலிருந்து இடது கரை நீர்பாசன வாய்க்கால் ஊடாக கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு பின்னர் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு டிப்போச் சந்திக்கருகில் உள்ள நீர்த்தாங்கி அனுப்பட்டு அங்கிருந்து பொது மக்களின் பாவணைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இரணைமடுகுளத்து நீர் ஒரு வித பச்சை நிறத்தில் காணப்படுகிறது. எனவே குழாய் வழி மூலம் விநியோகிக்கப்படுகின்ற நீரும் குளத்து நீரைவிட குறைவான பச்சை நிறத்தில் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.