Home இந்தியாபேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்

by admin


இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்ட போதும் அதனை மத்திய அரசும் ; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அதனனை நிராகரித்தனர்.

ஜனாதிபதியின் நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரிசின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது

எனவே, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்த மனு மீது ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More