தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ரா நகரில் நடைபெற்ற போரட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கில் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி பாஸ்ரா நகரில் கடந்த திங்கட்கிழமை உள்ளூர் மக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததன் காரணமாக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் போராட்டக்காரர்கள் 8 பேர் உயிர்ழந்திருந்தனர். பாதுகாப்பு படையினர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதுடன் பாஸ்ரா நகரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன் பெரும்பாலான வீதிகளையும் துண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.வன்முறை காரணமாக நேற்று அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் போரட்டங்கள் நடைபெற்றதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப்படையை சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறித்த பகுபுதி போர்களம் போல் காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது