பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் விசாரணைக்கு முன்னிலையாகாததால் நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா சாமியார் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கு, கார் சாரதி; லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக புலனாய்வுக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றல் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்த நீதிமன்றம அவர் மீதான வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 வழக்கு விசாரணைகளுக்கு நித்யானந்தா முன்னிலையாகாதநிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும் வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து 3 முறை தொடர்ந்து விசாரணைக்கு முன்னிலையாகாத ; நித்யானந்தாவுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்ததுடன் விசாரணையை எதிர்வரும் 14ம் திகதிpவரை ஒத்திவைத்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.