முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளநிலையில் அவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் இழுத்துக் கொண்டே செல்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதும் மத்திய அரசு அதற்கு தடை போட்டு வந்தது.இந்தநிலையில் உச்ச நீதிமன்றம் நேற்றையதினம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது
அதனையடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அவர்கள் ஆளுனரிடமும், முதல்வரிடம் கருணை மனுவை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் தற்போது தமிழக ஆளுநரிடம் இருப்பதால், என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.