192
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்றையதினம் திடீரென ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான போதும் ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தற்போது அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 620-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love