அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் உதவியாளரான ஜோர்ஜ் பாபுடோபுலஸ் (George Papadopoulos) என்பவருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. லண்டன் விடுதி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலில் ரஸ்ய தலையீடு குறித்து கருத்து தெரிவித்து அதுகுறித்த விசாரணைக்குள்ளாகிய 31 வயதாகும் ஜோர்ஜ் பாபுடோபுலஸ் வோஷிங்டன் நீதிமன்றத்தில் தான் ஒரு தேசப்பற்றுள்ள அமெரிக்கர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டதாகவும், தன்னை மீட்டுக் கொள்ள இரண்டாவது வாய்ப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம், ரஸ்யாவுக்காக அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த சந்திப்புகளின் நேரங்கள் குறித்து பாபுடோபுலஸ் பொய் கூறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
2016அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு காணப்பட்டமை குறித்த விசாரணையில் கைது செய்யப்படும் டிரம்பின் முதல் உதவியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது