பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவா, பஷில் ராஜபக்ஸவா? அல்லது வேறு யாருமா? என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி தேர்தலை பொது எதிரணிக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்களின் விருப்பினை பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பாக தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.