தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை என்பதை பொது மக்களிடம் எடுத்துக் கூற இருப்பதாக வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்ற பின்பே ஹைட்ரோ கார்பன் ஆய்வு ஆரம்பிக்கப்படும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களைக் கண்டறிந்து அவற்றினை எடுப்பதற்காக விடப்பட்ட ஏலத்தை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந் தம் ஹைட்ரோகார்பன் இயக்குநர கத்துடன் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதன் பிறகு தொடங்கும் நிலஆய்வுக்கு முன்பாக மத்திய அரசிடம் 25, தமிழக அரசிடம் சுமார் 15 உரிமங் கள் பெற வேண்டி உள்ளது. இதில் மாசு கட்டுப்பாடு ஆணையங்களின் உரிமங்களும் அடங்கும். இவற்றை பெற்ற பின்பே தமது நிலஆய்வை தொடங்குவதாக வேதாந்தா உறுதியளித்துள்ளது.