ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் “திருமதி பழனிச்சாமி”, 1998-ஆம் ஆண்டில் வெளியான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”, 1990-இல் வெளிவந்த “பாலைவனப் பறவைகள்’’, 1996-இல் வெளிவந்த “ஔவை சண்முகி”, 1998-இல் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான “நிலாவே வா”, கங்கை அமரன் இயக்கத்தில் 1991-இல் வெளிவந்த “புதுப்பட்டி பொன்னுத்தாயி”,1987-இல் வெளிவந்த “சின்னக்குயில் பாடுது”,”கண்ணைத் தொறக்கணும் சாமி”[1986], சமீபத்தில் வெளிவந்த “சகுனி” போன்ற 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் கோவை செந்தில்.
இவரும் இயக்குநர் பாக்கியராஜும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாக்கியராஜ் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறுவேடங்களேனும் சந்தர்ப்பங்கள் கொடுத்து உதவி வந்தார் கே.பாக்யராஜ். படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் உள்ளிட்ட வெற்றி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கடந்த 10 மார்ச் 2016-ஆம் ஆண்டு இவரும் சக நடிகர் செல்வகுமார் என்பவரும் இரு சக்கர வாகனத்தில் தியாகராய நகர் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 9.00 மணியளவில் விபத்தில் சிக்கினர். இதில் செல்வகுமார் நிகழ்விடத்திலேயே காலமானார். விபத்திற்குப் பின்னர் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கோவை செந்தில் இன்று காலமானார்