Home இலங்கைவாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்

வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்

by admin
யாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 18 வயதான இளைஞன் வாளுடன் அட்டகாசம் புரிந்துள்ளார்.  இளைஞனின் செயற்பாடு எல்லை மீறி சென்றதை அடுத்து , ஊரவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து , நயப்புடைந்த பின்னர் வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் வாளுடன் ஒப்படைத்துள்ளனர்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த காவல்துறையினா்  காவல் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More